Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லோர்ட்ஸில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் ஜோ றூட், ஜொனி பெயார்ஸ்டோவைத் தவிர்ந்த ஏனைய வீரர்களை இந்தியப் பந்துவீச்சாளர் ஆதிக்கம் செலுத்திய நிலையில், இந்த மோதலிலேயே இந்த டெஸ்டின் முடிவு தீர்மானிக்கப்படப் போகின்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சிரேஷ்ட சுழற்பந்துவீச்சாளரான மொயின் அலி, டான் லோரன்ஸை அணியில் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதோடு, ஸக் க்றொலியை ஹசீப் ஹமீட் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியைப் பொறுத்த வரையில், ஷர்துல் தாக்கூருக்குப் பதில் இரவிச்சந்திரன் அஷ்வின் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
இதேவேளை, செட்டேஸ்வர் புஜாரா உடனடியாக ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளதுடன், அணித்தலைவர் விராட் கோலி, அஜின்கியா ரஹானே ஆகியோரும் ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago