2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

‘இயற்கையான காரணங்களாலேயே வோர்ன் இறந்தார்’

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 08 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின் சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்தில் இயற்கையான காரணங்களாலேயே கடந்த வெள்ளிக்கிழமை இறந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் எவ்வித தவறான விடயமும் இல்லை என சிரேஷ்ட தாய்லாந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுமுறையில் இருந்தபோது கொஹ் சமுய் தீவில் மூர்ச்சையற்ற நிலையில் வோர்ன் கண்டுபிடிக்கப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய அரசாங்கமானது அவரது உடலை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வதுடன், அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X