Shanmugan Murugavel / 2025 நவம்பர் 05 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு சிம்பாப்வேயின் சிகண்டர் ராசா முன்னேறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கெதிரான முதலாவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், இரண்டாவதில் 37, மூன்றாவதில் 51 ஓட்டங்களைப் பெற்ற நிலையிலேயே ஐந்தாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை ராசா அடைந்துள்ளார்.
இதேவேளை பங்களாதேஷுக்கெதிரான மூன்றாவது போட்டியில் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன், ஒரு விக்கெட்டைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகளின் றொஸ்டன் சேஸ், ஒன்பதாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்தியாவுக்கெதிரான இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் ஜொஃப்ரா ஆர்ச்சர், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
இது தவிர இங்கிலாந்துக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது போட்டியில் 44, 56 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago