Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2021 ஏப்ரல் 29 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகின்றது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
கடந்த போட்டியில் இலங்கை சார்பாக விளையாடிய வனிடு ஹஸரங்க, லஹிரு குமாரவை ரமேஷ் மென்டிஸ், அறிமுக சுழற்பந்துவீச்சாளர் பிரவீன் ஜெயவிக்கிரம பிரதியிட்டிருந்தனர். பங்களாதேஷ் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய எபடொட் ஹொஸைனை, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட ஷொரிஃபுல் இஸ்லாம் பிரதியிட்டிருந்தார்.
இந்நிலையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, கருணாரத்ன, லஹிரு திரிமான்னவின் சதங்களுடன் பலமான நிலையை அடைந்து, கருணாரத்னவை ஷொரிஃபுல் இஸ்லாமுடன் இழந்தபோதும், அடுத்து வந்த ஒஷாத பெர்ணான்டோவின் நிதானத்துடன் இன்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 291 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
தற்போது களத்தில், திரிமான்ன 131, ஒஷாத பெர்ணான்டோ 40 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர். கருணாரத்ன 118 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.
12 minute ago
23 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
27 minute ago
32 minute ago