2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இறுதியில் நடால்-பெடரர்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 01 , மு.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவிஸ் உள்ளக டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பட்டத்தை வெல்பவர்களில் மூன்றாமிடத்தில் காணப்பட்ட ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், பட்டத்தை வெல்லுபவர்களில் முன்னணியில் காணப்பட்ட சுவிற்ஸர்லாந்தின் ரோஜர் பெடரரும் தகுதி பெற்றுள்ளனர்.

இது, நடாலின் வாழ்நாளில் 98ஆவது இறுதிப்போட்டி என்பதுடன், பெடரர் தனது சொந்த நகரில் ஏழாவது பட்டத்தை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளார்.

நடால் தனது அரையிறுதிப்போட்டியில் 6-4 7-6(7) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் ரிச்சர்ட் கஸ்கட்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்ததோடு பெடரர் தனது அரையிறுதிப்போட்டியில் 6-3 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்கரான ஜக் ஸ்டொக்கை ஒரு மணித்தியாலத்துக்குள்ளேயே தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .