Editorial / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் கழகங்களுக்கிடையிலான உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு, நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் நேற்றிரவு இடம்பெற்ற ஜப்பானியக் கழகமான கஷிமா அன்ட்லேர்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலமே இறுதிப் போட்டிக்கு ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் தகுதிபெற்றுள்ளது.
றியல் மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட மூன்று கோல்களையும் கரெத் பேல் பெற்ற நிலையில், கஷிமா அன்ட்லெர்ஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஷொமா டொய் பெற்றிருந்தார்.
அந்தவகையில், அபுதாபியில் நாளை மறுதினம் இரவு 10 மணிக்கு இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில், ஐக்கிய அரபு அமீரகக் கழகமான அல் ஐனை றியல் மட்ரிட் எதிர்கொள்கிறது.
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
41 minute ago
1 hours ago
2 hours ago