Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உத்தியோகபற்றற்ற நான்கு ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரின் கிறிஸ்சேர்ச்சில் இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை ஏ அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து ஏ அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து ஏ அணி, இலங்கை ஏ அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்த நிலையில், 45.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்த இலங்கை ஏ அணி, நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்து, 5 விக்கெட்டுக்களை இழந்து 202 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்டதோடு, இறுதி 5 விக்கெட்களையும் வெறும் 12 ஓட்டங்களுக்கு பறிகொடுத்திருந்தது. துடுப்பாட்டத்தில் இலங்கை ஏ அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தனுஷ்க குணதிலக 57 ஓட்டங்களையும், மூன்றாமிடத்தில் ஆடிய கிரிதுவன் விதானகே 58 ஓட்டங்களையும் பெற்றார்.
பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக மிட்செல் சன்டர் 4 விக்கெட்களையும், இஷ் சோதி 3 விக்கெட்டுக்களையும், நீல் வாக்னர் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து ஏ அணி 2 விக்கெட்களை மாத்திரமே இழந்து 39.3 ஓவர்களில் வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணி சார்பாக துடுப்பாட்டத்தில் ஜோர்ஜ் வேக்கர் ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களையும், மைக்கல் பொலார்ட் 59 ஓட்டங்களையும், ஹமிஷ் ருதர்போர்ட் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கையணி சார்பாக வீழ்த்தப்பட்ட 2 விக்கெட்களையும் ஷெகான் ஜயசூரிய வீழ்த்தினார். இரு அணிகளிடையேயான இரண்டாவது போட்டி புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago