Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான தொடரில் பிரகாசிக்கத் தவறிய மார்ட்டின் கப்டில், மார்க் கிறெய்க் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தொடரில், 3 போட்டிகளில் 6 இனிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய கப்டில், 13.66 என்ற சராசரியில் 82 ஓட்டங்களை மாத்திரம் பெற, தடுமாறிய கிறெய்க், 6 இனிங்ஸ்களில் 64.12 என்ற சராசரியில் 8 விக்கெட்டுகளை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.
அவுஸ்திரேலியத் தொடருக்கான குழாமில் இடம்பெற்றிருந்த மற் ஹென்றி, மிற்சல் மக்லநகன், லூக் றொங்கி, ஹேமிஷ் றதர்போர்ட் ஆகியோர், இக்குழாமில் இடம்பெற்றிருக்கவில்லை.
குழாம்: பிரென்டன் மக்கலம், ட்ரென்ட் போல்ட்ற், டக் பிரேஸ்வெல், மார்க் கிறெய்க், மார்ட்டின் கப்டில், டொம் லதம், மிற்சல் சன்ட்னெர், டிம் சௌதி, றொஸ் டெய்லர், நீல் வக்னர், பி.ஜே வற்லிங், கேன் வில்லியம்ஸன்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago