Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 26 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் இன்று (26) ஆரம்பமான முதலாவது போட்டியில், சுரங்க லக்மால் இலங்கையணிக்கு முன்னிலையை வழங்கியுள்ளார்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணியின் தலைவர் பப் டு பிளெஸி, தமது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். அந்தவகையில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடத் தொடங்கிய தென்னாபிரிக்க அணிக்கு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர்.
மதிய நேர உணவு இடைவேளையின்போது, எதுவித விக்கெட் இழப்புமின்றி 92 ஓட்டங்களை பெற்ற தென்னாபிரிக்க அணி, முதல் நாள் முடிவில் குறைந்த விக்கெட் எண்ணிக்கையுடன் உறுதியான ஓட்ட எண்ணிக்கையை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதும், மதியநேர உணவு இடைவேளையின் பின்னர் பந்துவீச வந்த சுரங்க லக்மால், தனது அபாரமான பந்துவீச்சினால், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரினதும் விக்கெட்டை குறுகிய இடைவேளையில் கைப்பற்றி, தென்னாபிரிக்க அணியின் இனிங்ஸில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். பின்னர் வந்த ஹஷிம் அம்லா தடுமாறியபோதும், ஜெ.பி.டுமினி ஓட்டங்களைக் குவிக்க தென்னாபிரிக்க அணி மீண்டும் முன்னோக்கிச் சென்றது.
எனினும், தேநீர் இடைவேளையின் பின்னர் பந்துவீச வந்த சுரங்க லக்மால், ஹஷிம் அம்லாவின் விக்கெட்டினை கைப்பற்றியதுடன், அதன் பின்னர் முக்கியமான விக்கெட்டான ஜெ.பி.டுமினியின் விக்கெட்டினை ரங்கன ஹேரத் கைப்பற்றினார். தொடர்ந்து, தெம்பா பவுமாவின் விக்கெட்டினையும் ஹேரத் கைப்பற்றினார்.
பின்னர், புதிய பந்தில் பப் டு பிளெஸியின் விக்கெட்டினை கைப்பற்றிய சுரங்க லக்மால், முதல் நாள் முடிவில் இலங்கையணிக்கு மயிரிழை முன்னனிலையை வழங்கினார். அந்தவகையில், முதலாவது நாள் ஆட்ட முடிவில், தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி, ஆறு விக்கெட்டுகளையிழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது.
தற்போது களத்தில், குயின்டன் டி கொக் 25 ஓட்டங்களுடனும் வேர்ணன் பிளாந்தர் ஆறு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முன்னதாக, ஜெ.பி.டுமினி 63, ஸ்டீபன் குக் 59, டீன் எல்கர் 45, பப் டு பிளெஸி 37 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில், சுரங்க லக்மால் நான்கு விக்கெட்டுகளையும், ரங்கன ஹேரத் இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
2 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago