Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நேற்று கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தமது முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முன்னதாக நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சகல விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் இலங்கையணி சார்பாக மிலிந்த சிரிவர்த்தன 68 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 26, தினேஷ் சந்திமால் 25 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பாக ஜோமெல் வொரிக்கான் 4, அணித்தலைவர் ஜெஸன் ஹோல்டர், ஜெரோம் டெய்லர் தலா 2 விக்கெட்களையும் கேமர் ரோச், தேவேந்திர பிஷூ தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தற்போது களத்தில் கிரேய்க் பிராத்வெயிட் 4, இரவுநேரக் காப்பாளனாக களமிறங்கிய தேவேந்திர பிஷூ 5 ஓட்டங்களுடனும் உள்ளனர்.
இப்போட்டியில் இலங்கையணியில் லகிரு திரிமானேக்கு பதில் குஷால் மென்டிஸ் அறிமுகத்தை மேற்கொண்டதுடன் தரிந்து கௌஷாலுக்கு பதில் டில்ருவான் பெரேரா அணியில் இடம்பெற்றதுடன் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கப்ரியலுக்கு பதில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ஜோமெல் வொரிக்கான் அறிமுகத்தை மேற்கொண்டார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago