2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் தொடர் விவரம்

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இலங்கைக்குமிடையிலான கிரிக்கெட் தொடரின் முழு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை கிரிக்கெட் சபையால் வெளியிடப்படவுள்ள விவரங்களின் அடிப்படையில், 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் ஆகியன இடம்பெறவுள்ளன.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதோடு, நவம்பர் மாதம் 12ஆம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியுடன், இத்தொடர் நிறைவுக்கு வரவுள்ளது.

போட்டி அட்டவணை:

1ஆவது டெஸ்ட் - ஒக். 14 - 18 - காலி

2ஆவது டெஸ்ட் - ஒக். 22 - 26 - பி. சரா ஓவல்

1ஆவது ஒ.நா.ச.போ. - நவ. 01 - ஆர். பிரேமதாச

2ஆவது ஒ.நா.ச.போ. - நவ. 04 - ஆர். பிரேமதாச

3ஆவது ஒ.நா.ச.போ. - நவ. 07 - பல்லேகெல்ல

1ஆவது இ-20.ச.போ. - நவ. 09 - பல்லேகெல்ல

2ஆவது இ-20.ச.போ. - நவ. 12 - ஆர். பிரேமதாச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .