2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இலங்கையில் இந்திய, பாகிஸ்தான் தொடர்?

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 23 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டிகள், இலங்கையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் பிரச்சினைகள் காரணமாக, இருதரப்புத் தொடரொன்றை ஏற்பாடு செய்வது தொடர்பில் இழுபறி நிலை காணப்படுகிறது.

போட்டி அட்டவணையின்படி, இந்தத் தொடர், பாகிஸ்தானில் இடம்பெற வேண்டும். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ள மறுக்கும் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து விளையாடவும் மறுப்புத் தெரிவிக்கிறது. மறுபுறத்தில், இந்தியாவில் வைத்து விளையாட, பாகிஸ்தான் மறுப்புத் தெரிவிக்கிறது.

இந்நிலையிலேயே, இது தொடர்பான கலந்துரையாடல், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷஷாங் மனோகர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷஹாரியார் கான் இருவரும், இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் கைல்ஸ் கிளார்க்கின் பிரசன்னத்துடன், பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, மூன்று ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் அடங்கிய தொடரொன்றை, இலங்கையில் விளையாடுவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புத் தொடர்பான உறுதியான முடிவு, இன்னமும் அறிவிக்கப்படாத போதிலும், இத்தொடர் இலங்கையில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

சந்திப்பின் பின் கருத்துத் தெரிவித்த ஷஹாரியார் கான், அந்தச் சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, கைல்ஸ் கிளார்க் விடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இரு அணிகளுக்குமிடையிலான இருதரப்புத் தொடரொன்று, இறுதியாக 2012ஆம் ஆண்டே இடம்பெற்றிருந்தது. அது, இந்தியாவில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .