2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

இலங்கையை வென்று உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 2ஆவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 295 ஓட்டங்களைக் குவித்தது. பதிலளித்தாடிய இலங்கை அணி, 49ஆவது ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 173 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 122 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது.

இந்த வெற்றி மூலம், ஐ.சி.சி பெண்கள் சம்பியன்ஷிப் தொடரில் முதல் 4 இடங்களுக்குள் வருவதை உறுதிப்படுத்திய இங்கிலாந்து, உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .