Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2022 மே 23 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
முதலாவது போட்டியானது வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில் இப்போட்டியானது முக்கியத்துவம் பெறுகையில் ஆடுகளமானது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருக்கும் எனத் தெரிகிறது.
போட்டியின் முதலிரண்டு நாள்களிலும் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்ற போதிலும் இப்போட்டியில் முடிவு கிடைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலாவது போட்டியில் இலங்கையணியின் சுழற்பந்துவீச்சாளர்களான ரமேஷ் மென்டிஸ், லசித் எம்புல்தெனிய ஆகியோர் சோபித்திருக்காத நிலையில், இலங்கையணியில் கசுன் ராஜிதவை பிரவீன் ஜெயவிக்கிரம பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுப்பக்கமாக பங்களாதேஷில் காயமடைந்த நயீம் ஹஸன், ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் மொஷாடெக் ஹொஸைன், எபொடொட் ஹொஸைன் ஆகியோரால் பிரதியிடப்படுவர் எனத் தெரிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago
3 hours ago