Editorial / 2018 ஜூலை 29 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கையணி, 34.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், குசல் பெரேரா 81 (72), திஸர பெரேரா 49 (30) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், தப்ரையாஸ் ஷம்சி, கஜிஸோ றபாடா ஆகியோர் தலா 4, லுங்கி என்கிடி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு 194 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 31 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்து 19 ஓவர்கள் மீதமிருக்க 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. துடுப்பாட்டத்தில், ஜெ.பி டுமினி ஆட்டமிழக்காமல் 53 (32), அணித்தலைவர் பப் டு பிளெஸி 47 (56), குயின்டன் டி கொk 47 (59) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், அகில தனஞ்சய 3, சுரங்க லக்மால், லக்ஷன் சந்தகான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago