Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவின், பிறிஸ்பேணில், நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் பங்கேற்பதற்கான உடற்றகுதியை அடைந்து விடுவேன் என்பதில் அவுஸ்திரேலிய அணியின் உப அணித்தலைவர் டேவிட் வோணர் உறுதியாகவுள்ளார்.
எவ்வாறெனினும், களத்தடுப்பு பயிற்சியொன்றின்போது கழுத்தில் உபாதைக்குள்ளான டேவிட் வோணர், வலைப்பயிற்சியின்போது இரண்டு எறிகளை மாத்திரமே இன்று எதிர்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்புறமாக ஓடி, உயர்ந்து வந்த பந்தொன்றை பிடியெடுத்தபோதே கழுத்தில் உபாதைக்குள்ளான டேவிட் வோணர், உடனடியாக சிகிச்சைக்காக, அவுஸ்திரேலிய அணியின் உடற்கூற்று நிபுணரான டேவிட் பீக்லியிடம் சென்றிருந்தார்.
பின்னர் துடுப்பெடுத்தாடுவதற்காக வலைபயிற்சிக்கு வந்த டேவிட் வோணர், அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளரான கிறேமி ஹிக்கிடமிருந்து இரண்டு எறிகளை மட்டும் எதிர்கொண்ட பின்னர் வலைப்பயிற்சியிலிருந்து விலகியிருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago