Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் அவுஸ்திரேலிய, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து அணிகள் வெற்றிபெற்றுள்ளன.
அவுஸ்திரேலிய, உருகுவே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில், அவுஸ்திரேலிய அணி 65-3 என்ற புள்ளிகள் அடிப்படையில் மிகச்சிறப்பான வெற்றியைப் பெற்றது.
ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி, முதல் 12 புள்ளிகளையும் தொடர்ச்சியாகப் பெற்ற பின்னரே, உருகுவே அணிக்கான புள்ளிகளை வழங்கியது. அதன் பின்னர், முதற்பாதி முடிவில் 31-3 என்ற புள்ளிகளின் அடிப்படையில் அவுஸ்திரேலியா முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய அவுஸ்திரேலிய அணி, உருகுவே அணிக்குப் புள்ளிகளை வழங்காது விளையாடி, 65-3 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
இப்போட்டியின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் சியன் மக்மோஹன் தெரிவானார்.
ஸ்கொட்லாந்து அணிக்கும் ஐக்கிய அமெரிக்க அணிக்குமிடையிலான போட்டியில், ஸ்கொட்லாந்து அணி 39-16 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
முதற்பாதி முடிவில் 13-6 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அமெரிக்க அணி முன்னிலை வகித்ததது.
எனினும், இரண்டாவது பாதியில் ஸ்கொட்லாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அமெரிக்க அணி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
போட்டியின் 51ஆவது நிமிடத்தில், 18-16 என ஸ்கொட்லாந்து அணி முன்னிலை வகித்த போதிலும், அமெரிக்காவுக்கான வாய்ப்புகள் காணப்பட்டன. எனினும், ஸ்கொட்லாந்து அணி ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, அடுத்த 18 புள்ளிகளைப் பெறும் போது எந்தவிதமான புள்ளிகளையும் விட்டுக் கொடுத்திருக்கவில்லை.
அயர்லாந்து, றோமானிய அணிகளுக்கிடையிலான போட்டியில் அயர்லாந்து அணி 44-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய அயர்லாந்து அணி, முதற்பாதி முடிவில் 18-3 என முன்னிலை வகித்ததோடு, இரண்டாவது பாதியில் இன்னமும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 44-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago