2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

உலக டென்னிஸ் சங்க பட்டத்தை கைப்பற்றினார் ரட்வன்ஸ்கா

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 02 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் உலகின் ஆறாம் நிலை வீராங்கனையான போலந்தின் அக்னியசா ரட்வன்ஸ்கா 6-2 4-6 6-3 என்ற செட் கணக்கில் முன்னாள் விம்பிள்டன் சம்பியனும், தரவரிசையில் ஐந்தாம் இடத்தில் இருப்பவருமான செக் குடியரசின் பெற்றா கிவிட்டோவாவை தோற்கடித்து முதற்தடவையாக உலக டென்னிஸ் சங்க இறுதிப்பட்டத்தை கைப்பற்றினார்.

முதலாவது செட்டை ரட்வன்ஸ்கா கைப்பற்றிய நிலையில், அடுத்த செட்டை கிவிட்டோவா கைப்பற்றினார். இந்நிலையில் தீர்மானிக்க மூன்றாவது செட்டில், ஒரு கட்டத்தில் புள்ளிகள் சமநிலையில் இருந்தாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்ட ரட்வன்ஸ்கா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார்.

இரண்டு தொடர் சுழல் முறைப் போட்டிகளில் தோல்வியுற்று, பின்னர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் வீராங்கனையாக ரட்வன்ஸ்கா காணப்படுகிறார்.

இதுதான் எனக்கு அனைத்தும், இது எனது முதலாவது இறுதிப்போட்டியிலேயே நான் வெற்றி பெற்றுள்ளேன், இதை விட சிறந்தது வேறெதுவுமில்லை என ரட்வன்ஸ்கா வெற்றி பெற்ற பின் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .