Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 16 , பி.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவில், அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்துக்கு இறுதி அணியாக பெரு தெரிவாகியுள்ளது. அந்தவகையில், 1982ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக உலகக் கிண்ணத்துக்கு பெரு தெரிவாகியுள்ளது.
நியூசிலாந்துக்கெதிரான முதலாவது சுற்று உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் கோலெதனையும் பெறாமல் போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்ட பெரு, இன்று காலையில் இடம்பெற்ற இரண்டாவது சுற்று தகுதிகாண் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, 2-0 என்ற மொத்த கோல் கணக்கில் நியூசிலாந்தை வென்று உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
குறித்த போட்டியின் 28ஆவது நிமிடத்தில், ஜெபெர்சன் பர்பான் பெற்ற கோலின் மூலம் முன்னிலைப் பெற்ற பெரு, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியன் றாமோஸ் பெற்ற கோலுடன் தமது வெற்றியை உறுதிப்படுத்தி, 2-0 என்ற கோல் கணக்கில், நியூசிலாந்தை வென்றது.
அந்தவகையில், பெருவுடன் சேர்த்து, ரஷ்யாவில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 32 அணிகளும் தெரிவாகியுள்ள நிலையில், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட தரப்படுத்தலின்படி 32 அணிகளும் தொகுதிகளாக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளிலிருந்து, அடுத்த மாதம் முதலாம் திகதி அணிகள் தெரிவுசெய்யப்பட்டு குழுக்கள் தீர்மானிக்கப்படவுள்ளது.
அந்தவகையில், ரஷ்யா, ஜேர்மனி, பிரேஸில், போர்த்துக்கல், ஆர்ஜென்டீனா, பெல்ஜியம், போலந்து, பிரான்ஸ் ஆகியன தொகுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி இரண்டில், ஸ்பெய்ன், பெரு, சுவிற்ஸர்லாந்து, இங்கிலாந்து, கொலம்பியா, மெக்ஸிக்கோ, உருகுவே, குரோஷியா ஆகியன இடம்பெற்றுள்ளன.
தொகுதி மூன்றில், டென்மார்க், ஐஸ்லாந்து, கொஸ்டாறிக்கா, சுவீடன், துனீஷியா, எகிப்து, செனகல், ஈரான் ஆகியன இடம்பெற்றுள்ளன.
தொகுதி நான்கில், சேர்பியா, நைஜீரியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், மொராக்கோ, பனாமா, தென்கொரியா, சவூதி அரேபியா ஆகியன இடம்பெற்றுள்ளன.
8 hours ago
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
20 Jul 2025