2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 07 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, குழு ஒன்றிலிருந்து இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.

இக்குழுவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா தவிர தென்னாபிரிக்காவும் எட்டுப் புள்ளிகளைப் பெற்றபோதும் ஓட்ட விகிதத்தின் அடிப்படையில் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் நேற்றிரவு நடைபெற்ற இங்கிலாந்துடனான போட்டியில் தென்னாபிரிக்கா வென்றிருந்தது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

தென்னாபிரிக்கா: 189/2 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: றஸி வான் டர் டுஸன் ஆ.இ 94 (60), ஏய்டன் மார்க்ரம் ஆ.இ 52 (25), குயின்டன் டி கொக் 34 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொயின் அலி 1/27 [4], அடில் ரஷீட் 1/32 [4])

இங்கிலாந்து: 179/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: மொயின் அலி 37 (27), டேவிட் மலான் 33 (26), லியாம் லிவிங்ஸ்டோன் 28 (17), ஜொஸ் பட்லர் 26 (15), ஜேஸன் றோய் 20 (15) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 2/24 [4], கேஷவ் மஹராஜ் 0/23 [3], அன்றிச் நொர்ட்ஜே 1/34 [4], ககிஸோ றபாடா 3/48 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 2/30 [3])

போட்டியின் நாயகன்: றஸி வான் டர் டுஸன்

இப்போட்டியின் இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் முறையே கிறிஸ் வோக்ஸ், அணித்தலைவர் ஒய்ன் மோர்கன், கிறிஸ் ஜோர்டானை வீழ்த்திய ககிஸோ றபாடா, ஹட்-ட்ரிக்கை நிகழ்த்தியிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X