Shanmugan Murugavel / 2021 நவம்பர் 01 , பி.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஷார்ஜாவில் நடைபெற்ற இங்கிலாந்துடனான குழு ஒன்று சுப்பர் 12 போட்டியில் இலங்கை தோற்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணித்தலைவர் தசுன் ஷானக, இங்கிலாந்தை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, வனிடு ஹஸரங்கவிடம் 2, துஷ்மந்த சமீரவிடம் விக்கெட்டுகளை இழந்தபோதும், ஜொஸ் பட்லரின் ஆட்டமிழக்காத 101 (67), அணித்தலைவர் ஒய்ன் மோர்கனின் 40 (36) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஹஸரங்க 4-0-21-3, மஹேஷ் தீக்ஷன 4-0-13-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இதேவேளை, 164 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை சார்பாக ஹஸரங்க 34 (21), பானுக ராஜபக்ஷ 26 (18), தசுன் ஷானக 26 (25), சரித் அஸலங்க 21 (16) ஓட்டங்களைப் பெற்றனர்.
எனினும், எவரும் நிலைத்து நிற்காமல் குறிப்பிட்ட இடைவெளிகளில் அடில் ரஷீட் (2), கிறிஸ் ஜோர்டான் (2), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலியிடம் (2) விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களையே பெற்று 26 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், ரஷீட் 4-0-19-2, மொயின் 3-0-15-2, ஜோர்டான் 4-0-19-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக ஜொஸ் படலர் தெரிவானார்.
39 minute ago
2 hours ago
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago
25 Jan 2026