Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் அரையிறுதிப் போட்டிகளுக்கு ஜஃப்னா ஸ்டாலியன்ஸ், தம்புள்ள வைக்கிங் ஆகியன தகுதிபெற்றுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற தம்புள்ளவுடனான போட்டியில் கோல் கிளாடியேட்டர்ஸ் தோற்றதைத் தொடர்ந்தே, புள்ளிகள் பட்டியலில் தலா எட்டுப் புள்ளிகளுடன் முதலிரண்டு இடங்களிலுமுள்ள யாழ்ப்பாணம், தம்புள்ள ஆகியன அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.
ஏனெனில் இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளிலும் தோற்று இறுதியிடத்திலுள்ள காலி எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக ஆறு புள்ளிகளையே பெற முடியும்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: தம்புள்ள
தம்புள்ள: 207/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: உப்புல் தரங்க 77 (54), நிரோஷன் டிக்வெல்ல 60 (37), தசுன் ஷானக 37 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் ஆமிர் 0/23 [4], தனுஷ்க குணதிலக 0/23 [3])
காலி: 198/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: தனுஷ்க குணதிலக 78 (52), அஸாம் கான் 55 (24) ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்வர் அலி 3/37 [4], தசுன் ஷானக 1/10 [2])
போட்டியின் நாயகன்: அன்வர் அலி
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago