2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்: கொழும்பும் அரையிறுதியில்

Shanmugan Murugavel   / 2020 டிசெம்பர் 05 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் அரையிறுதிப் போட்டிக்கு கொழும்பு கிங்ஸும் தகுதிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற கண்டி டஸ்கர்ஸுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே கொழும்பும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியைத் தொடர்ந்து ஜஃப்னா ஸ்டாலியன்ஸுக்கு அடுத்ததாக புள்ளிகள் பட்டியலில் எட்டுப் புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் கொழும்பு காணப்படுகின்ற நிலையில், தலா எட்டுப் புள்ளிகளைப் பெற்றுள்ள இவையிரண்டு, மூன்றாமிடத்திலுள்ள தம்புள்ள வைக்கிங்கை கண்டி டஸ்கர்ஸும், கோல் கிளாடியேட்டர்ஸும் முந்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: கண்டி

கண்டி: 105/10 (19.2 ஓவ. ) (துடுப்பாட்டம்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 34 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: குவைஸ் அஹ்மட் 2/8 [4], அஷான் பிரியஞ்சன் 2/4 [1], திக்‌ஷில டி சில்வா 2/6 [1.2], துஷ்மந்த சமீர 1/17 [4], அஞ்சலோ மத்தியூஸ் 1/14 [2], அன்ட்ரே ரஸல் 1/18 [2], தரிந்து கெளஷால் 0/12 [2], இசுரு உதான 0/21 [3])

கொழும்பு: 108/3 (14.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: தினேஷ் சந்திமால் ஆ.இ 35 (39), அஷான் பிரியஞ்சன் ஆ.இ 26 (27) ஓட்டங்கள். பந்துவீச்சு: நுவான் பிரதீப் 1/10 [2.1], முனாப் பட்டேல் 1/28 [4], விஷ்வ பெர்ணான்டோ 1/29 [1], இர்பான் பதான் 0/5 [1], லசித் எம்புல்தெனிய 0/24 [3])

போட்டியின் நாயகன்: டுஷ்மந்த சமீர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X