Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கில் (எல்.பி.எல்), ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற கொழும்பு கிங்ஸுடனான போட்டியில் தம்புள்ளை வைக்கிங் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை, ஆரம்பத்திலேயே ஆரம்பத் துடுப்பாட்டவீரர்கள் நிரோஷன் டிக்வெல்ல, போல் ஸ்டேர்லிங்கை தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் கொழும்பு அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், இசுரு உதானவிடம் இழந்தது.
எனினும், அதன் பின்னர் உப்புல் தரங்கவின் 25 (24), சமித் பட்டேலின் 30 (27), அணித்தலைவர் தசுன் ஷானகவின் 56 (34), அஞ்சலோ பெரேராவின் 21 (16), மலிந்த புஷ்பகுமாரவின் ஆட்டமிழக்காத 11 (03) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்களை தம்புள்ளை பெற்றது. கட்டுக்கோப்பாக பந்துவீசிய உதான 3, டுஷ்மந்த சமீர 2, அன்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு, 176 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கொழும்பு சார்பாக லோரி இவான்ஸ் மாத்திரமே 59 (33) ஓட்டங்களைப் பெற்றதுடன், கட்டுக்கோப்பாக பந்துவீசிய மலிந்த புஷ்பகுமார, சமித் பட்டேல், அன்வர் அலி மற்றும் புலின தரங்கவிடம் தலா 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களையே பெற்று 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக தசுன் ஷானக தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago