Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 நவம்பர் 18 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) தொடர்ந்தும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
எவ்வாறெனினும், திட்டமிட்டபடி இம்மாதம் 26ஆம் திகதி எல்.பி.எல்லானது ஆரம்பிக்கும் என்பதில் இலங்கை கிரிக்கெட் சபை உறுதியாயுள்ளது.
கொழும்பு கிங்ஸை பயிற்றுவிக்கவிருந்த டேவ் வட்மோர், தம்புள்ள அணியைத் தெரிவுசெய்த ஜோன் லூயிஸ் ஆகியோர் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கபீர் அலியால் வட்மோர் பிரதிட்டப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் கபீர் அலி கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் அவரும் தொடரிலிருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் கொழும்பு அணியை யார் பயிற்றுவிப்பார் என்பது தெளிவில்லாமலுள்ளது.
தவிர, கிறிஸ் கெய்ல் தொடரில் பங்கேற்பாரா என்பது தொடர்பாக நிச்சயமில்லாத தன்மை நிலவுகின்றது. கண்டி டஸ்கர்ஸுடனான தனது ஒப்பந்தம் குறித்து இன்னும் கெய்ல் பேரம் பேசுகின்ற நிலையில், அவர் நாளை வருவார் என கண்டியின் பயிற்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வஹாப் றியாஸ், லியம் பிளங்கெட் ஆகியோர் தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில், முனாஃப் பட்டேல், சொஹைல் தன்வீரை கண்டி தெரிவுசெய்துள்ளது.
தவிர, கைல் அபொட், டுவன்னே ஒலிவர் ஆகியோர் ஜஃப்னா ஸ்டானியன்ஸ் அணியில் ஆசிஃப் அலி, டேவிட் மலனை பிரதியிடுகின்ற நிலையில், ரவி பொப்பாரா, ஷொய்ப் மலிக் ஆகியோரும் தமது குழாமிலுள்ளதாக அவ்வணி தெரிவித்துள்ளது. எனினும், இவர்கள் இருவரும் தமது 100 சதவீத ஊதியத்தை தொடருக்கு முன்னரே கோருகின்ற நிலையில் இவர்களின் பங்கேற்பும் சந்தேகமாகவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago