2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

எல்.பி.எல்லின் திகதிகள் மாறலாம்

Shanmugan Murugavel   / 2020 நவம்பர் 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கின் (எல்.பி.எல்) ஆரம்ப திகதியான இம்மாதம் 21ஆம் திகதி மீளக் கருத்திற் கொள்ளப்படுவதுடன், தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அல்லது மலேஷியாவுக்கு நகர்த்தப்படும் வாய்ப்பொன்றும் காணப்படுகிறது.

தொடரை இலங்கையிலேயே நடத்த இலங்கை கிரிக்கெட் சபை விரும்புவதாகவும் ஆனால் சுகாதாரமைச்சின் 14 நாள் தனிமைப்படுத்தலானது சில வெளிநாட்டு வீரர்கள், ஒளிபரப்புக் குழுக்கள், வர்ணணையாளர்களுக்கு பிரச்சினையானதாகக் காணப்படுவதாக தொடரின் பணிப்பாளர் றபின் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

தொடரின் அட்டவணையானது மீண்டும் மீண்டும் இரத்தான நிலையில், இவ்வாண்டு தொடரை நடாத்த எதிர்பார்க்கும் கிரிக்கெட் சபை, மூன்று தெரிவுகளை கருத்திற் கொள்வதாக றவின் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாவது தெரிவாக ஹம்பாந்தோட்டை, பல்லேகலவில் தொடரை விளையாடுவது, இரண்டாவது தெரிவாக ஓரிடத்தில் தொடரை விளையாடுவது, மூன்றாவது தெரிவாக ஐ.அ. அமீரகம் அல்லது மலேஷியாவில் விளையாடுவதாக உள்ளதாக றவின் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் சபை அதிகாரிகளும், தொடர் ஒழுங்கமைப்பாளர்களும் நாளை  சுகாதாரமைச்சை சந்திக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .