Shanmugan Murugavel / 2016 நவம்பர் 14 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக டென்னிஸ் தரப்படுத்தலில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர்களுக்கிடையிலான தொடரான "ஏ.டி.பி உலகத் தொடர் இறுதிப் போட்டிகள்"இல், நொவக் ஜோக்கோவிச், மிலோஸ் றாவோனிஸ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்தத் தொடரில் முதன்முறையாக இம்முறை பங்குபற்றிய ஒஸ்திரியாவைச் சேர்ந்தவரும் உலகின் 9ஆம் நிலை வீரருமான டொமினிக் தியெத்தை எதிர்கொண்ட முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய 2ஆம் நிலை வீரருமான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-7, 6-0, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். முதலாவது செட்டை இழந்த அவர், அதன் பின்னர் போராடி, மிக இலகுவாகவே அடுத்த இரு செட்களையும் கைப்பற்றியிருந்தார்.
பிரித்தானியாவைச் சேர்ந்த அன்டி மரேயிடம், தனது முதலிடத்தை இழந்த ஜோக்கோவிச், அவ்விடத்தை மீண்டும் பெற வேண்டுமெனில், இத்தொடரில் அன்டி மரே வெளிப்படுத்தும் திறமையை விட, ஒருபடி சிறப்பான நிலைமையை அடைய வேண்டும் என்பது, இத்தொடருக்கான சுவாரசியத்தை மேலும் அதிகரித்துள்ளது.
உலகின் 6ஆம் நிலை வீரரான பிரான்ஸின் காயெல் மொன்பிளிஸை எதிர்கொண்ட 4ஆம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் றாவோனிஸ், 6-3, 6-4 என்ற செட் கணக்கில், தனது போட்டியில் வெற்றிபெற்றார்.
ஏனைய டென்னிஸ் தொடர்களைப் போலல்லாது, குழு நிலை இடம்பெறும் இத்தொடரில், ஒரு போட்டியில் தோற்றவர், உடனடியாகவே தொடரிலிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago