2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஏ.டி.பி உலகத் தொடர் இறுதிப் போட்டிகள்: மரே, நிஷிகோரி வெற்றி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 15 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக டென்னிஸ் தரவரிசைப்படுத்தல்களில், முதல் எட்டு இடங்களுக்குள் உள்ள வீரர்களுக்கிடையே குழு நிலையில் இடம்பெறும் தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பு உலகத் தொடர் இறுதிப் போட்டிகளில், நேற்றுத் திங்கட்கிழமை (14) இடம்பெற்ற குழு “ஏ” போட்டிகளில், உலகின் முதல்நிலை வீரரான பிரித்தானியாவின் அன்டி மரே, உலகின் ஐந்தாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

உலக டென்னிஸ் வரிசையில் முதலிடம் பெற்ற பின்னர், முதன்முறையாக போட்டியொன்றில் பங்கேற்ற அன்டி மரே, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில், உலகின் ஏழாம் நிலை வீரரான மரின் சிலிச்சை தோற்கடித்து, தனது 20ஆவது தொடர் வெற்றியைப் பெற்றுக் கொண்டார்.

இதேவேளை, கீ நிஷிகோரி, 6-2, 6-3 என்ற செட் கணக்கில், உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ஸ்‌டான் வவ்றிங்காவைத் தோற்கடித்து அதிர்ச்சி வெற்றி பெற்றார்.

ஆண்டின் இறுதியில், உலக டென்னிஸ் தரவரிசையில் யார் முதலிடம் பிடிப்பது என்று அன்டி மரேயும் முன்னாள் முதல்நிலை வீரரும் தற்போதைய இரண்டாம் நிலை வீரருமான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சும் போட்டியிடுகின்ற நிலையில், வவ்றிங்காவுக்கெதிராகப் பெற்ற அதிர்ச்சிகரமான இலகுவான வெற்றி மூலம், மூன்றாம் நிலையிலுள்ள வவ்றிங்காவை பிடிப்பதற்கான குறிப்பிடத்தக்க படியை நிஷிகோரி எடுத்து வைத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .