Shanmugan Murugavel / 2026 மே 20 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட லக்னோ, மிற்செல் மாஷின் 96 (57), ஜொஷ் இங்லிஸின் 60 (29), றிஷப் பண்டின் 35 (23), நிக்கலஸ் பூரானின் 16 (11) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் யஷ் ராஜ் புஞ்சா 4-0-25-2, ஜொஃப்ரா ஆர்ச்சர் 4-0-39-1 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 221 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான், வைபவ் சூரியவன்ஷியின் 93 (38), துருவ் ஜுரேலின் ஆட்டமிழக்காத 53 (38), யஷஸ்வி ஜைஸ்வாலின் 43 (23), டொனோவன் பெரைராவின் ஆட்டமிழக்காத 16 (10) ஓட்டங்களோடு 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக சூரியவன்ஷி தெரிவானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .