2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட மும்பை, லக்னோ

Shanmugan Murugavel   / 2026 மே 11 , பி.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மும்பை இந்தியன்ஸும் லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸும் இழந்துள்ளன.

ராய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற மும்பையுடனான போட்டியை நடப்புச் சம்பியன்களான றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றமையைத் தொடர்ந்தே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இரண்டு அணிகளும் இழந்துள்ளன.

இரண்டு அணிகளும் 11 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளையே பெற்றுள்ள நிலையில், எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வென்றாலும் 12 புள்ளிகளையே பெறலாம் என்ற நிலையில் புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்திலுள்ள பஞ்சாப் 13 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பெங்களூரு

மும்பை: 166/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: திலக் வர்மா 57 (42), நாமன் திர் 47 (32), றோஹித் ஷர்மா 22 (10), ராஜ் பவா 16 (14) ஓட்டங்கள். பந்துவீச்சு: புவ்னேஷ்வர் குமார் 4/23 [4], றொமாரியோ ஷெப்பர்ட் 1/18 [3])

பெங்களூரு: 167/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: குருனால் பாண்டியா 73 (46), ஜேக்கப் பெத்தெல் 27 (27), ஜிதேஷ் ஷர்மா 18 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: கொர்பின் பொஷ் 4/26 [4], தீபக் சஹர் 2/33 [4], ஜஸ்பிரிட் பும்ரா 0/20 [4], வில் ஜக்ஸ் 0/13 [2])

போட்டியின் நாயகன்: புவ்னேஷ்வர் குமார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .