2026 மே 15, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: ஹைதரபாத்தை சுருட்டிய குஜராத்

Shanmugan Murugavel   / 2026 மே 13 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), அஹமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத்துடனான போட்டியில் குஜராத் டைட்டான்ஸ் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட குஜராத், பிரஃபுல் ஹிஞ் (2), அணித்தலைவர் பற் கமின்ஸிடம் ஆரம்பத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தபோதும் சாய் சுதர்சனின் 61 (44), வொஷிங்டன் சுந்தரின் 50 (33) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு 169 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஹைதரபாத், மொஹமட் சிராஜ், ககிஸோ றபாடா (3), பிரசீத் கிருஷ்ணா (2), ஜேஸன் ஹோல்டர் (3), ரஷீட் கானிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 14.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 86 ஓட்டங்களையே பெற்று 82 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாயகனாக றபாடா தெரிவானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .