Shanmugan Murugavel / 2025 மார்ச் 17 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) நடப்புச் சம்பியன்களாகக் காணப்படும் கொல்கத்தா நைட் றைடர்ஸானது அணித்தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ரானா, பில் ஸோல்ட், மிற்செல் ஸ்டார்க் ஆகியோரை இழந்துள்ளபோதும் பெரும்பாலோரைத் தக்க வைத்துள்ளது.
குயின்டன் டி கொக், அஜின்கியா ரஹானே, மொயின் அலி, அன்றிச் நொர்கியா, ஸ்பென்ஸர் ஜோன்சனின் இணைப்பு பலத்தை வழங்குவதுடன் ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி ஆகியோரிடமிருந்து பெறுபேறுகள் காணப்படுகின்றன.
சுனில் நரைன், அன்ட்ரே ரஸலின் அண்மைக்கால பெறுபேறுகள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லாமை கேள்விக்குரிய விடயமாகக் காணப்படுகின்றது.
ரிங்கு சிங், ரமன்டீப் சிங் ஆகியோரிடமிருந்து இறுதி நேரத்தில் அதிரடி ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுவதுடன், அங்கிரிஷ் ரகுவன்ஷி கடந்த பருவகாலத்தை போல தொடருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் பதினொருவர்: சுனில் நரைன், குயின்டன் டி கொக், அஜின்கியா ரஹானே, அங்க்ரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்க், அன்ட்ரே ரஸல், ரமன்டீப் சிங்க், ஹர்ஷித் ரானா, அன்றிச் நொர்கியா, வருண் சக்கரவர்த்தி
தாக்கம் செலுத்தும் வீரர்கள்: ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ், றொவ்மன் பவல், மனிஷ் பாண்டே, வைபவ் அரோரா, அங்குல் றோய்
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
29 minute ago
36 minute ago