Shanmugan Murugavel / 2021 மே 03 , மு.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் பிறீமியர் லீக்கில், அஹமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற டெல்லியின் அணித்தலைவர் றிஷப் பண்ட், பஞ்சாப் கிங்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.
அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப், பதிலணித்தலைவர் மாயங்க் அகர்வாலின் ஆட்டமிழக்காத 99 (58) ஓட்டங்களோடு, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், அக்ஸர் பட்டேல், நான்கு ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், ககிஸோ றபாடா, நான்கு ஓவர்களில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு, 167 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய டெல்லி, ஷீகர் தவானின் 69 (47), பிறித்திவி ஷாவின் 39 (22) ஓட்டங்களோடு, 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ஹர்பிறீட் பிறார், மூன்று ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்த நிலையில், தீபக் ஹூடா இரண்டு ஓவர்களில் 11 ஓட்டங்களையே விட்டுக் கொடுத்திருந்தார்.
37 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
1 hours ago
1 hours ago