Shanmugan Murugavel / 2024 மே 27 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) இவ்வாண்டுத் தொடரின் பெறுமதி மிக்க வீரராக கொல்கத்தா நைட் றைடர்ஸின் சுனில் நரைன் தெரிவானார்.
தொடரின் 15 போட்டிகளில் விளையாடிய நரைன், 14 இனிங்ஸ்களில் 100 பந்துகளுக்கு 180.74 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 488 ஓட்டங்களைப் பெற்றதோடு, ஓவருக்கு 6.69 ஓட்டங்களையே வழங்கி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு மூன்று ரண் அவுட்களையும் ஏற்படுத்தியிருந்தார்.
நரைனுக்கு அடுத்ததாக 15 போட்டிகளில் விளையாடி 100 பந்துகளில் 154.69 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 741 ஓட்டங்களைக் குவித்ததோடு, எட்டு ரண் அவுட்களை ஏற்படுத்தியிருந்த றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூருவின் விராட் கோலி, தொடரின் பெறுமதி மிக்க வீரர்களில் இரண்டாமிடத்தில் காணப்பட்டிருந்தார்.
பெறுமதிக்க வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்தில் 100 பந்துகளுக்கு 191.55 ஓட்டங்கள் என்ற வேகத்தில் 15 போட்டிகளில் 567 ஓட்டங்களைப் பெற்ற ட்ரெவிஸ் ஹெட் காணப்பட்டிருந்தார்.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago