2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஐ.பி.எல்: விடுவிக்கப்பட்ட ரஸல், பத்திரண

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 16 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தா நைட் றைடர்ஸிலிருந்து அன்ட்ரே ரஸல், வெங்கடேஷ் ஐயர், குயின்டன் டி கொக், அன்றிச் நொர்கியா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர ரஹ்மனுல்லா குர்பாஸ், ஸ்பென்ஸன் ஜோன்சன், மொயின் அலி ஆகியோர் நைட் றைடர்ஸிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சென்னை சுப்பர் கிங்ஸிலிருந்து மதீஷ பத்திரண, டெவோன் கொன்வே, றஷின் றவீந்திர, தீபக் ஹூடா, ராகுல் ட்ரிபாதி, விஜய் ஷங்கர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸிலிருந்து கிளென் மக்ஸ்வெல், ஜொஷ் இங்லிஸ், ஆரோன் ஹாடி, கைல் ஜேமிஸன் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் றோயல்ஸிலிருந்து மகேஷ் தீக்‌ஷன, வனிது ஹசரங்க, பஸல்ஹக் பரூக்கி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதுடன், நிதிஷ் ரான டெல்லி கப்பிட்டல்ஸுக்கு சென்றுள்ளார்.

றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு லியம் லிவிங்ஸ்டன், லுங்கி என்கிடி, மாயங்க் அகர்வால் உள்ளிட்டோரை விடுவித்துள்ளது.

சண்றைசர்ஸ் ஹைதரபாத்திலிருந்து மொஹமட் ஷமி லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸுக்கு சென்றதுடன் அடம் ஸாம்பா, ராகுல் சஹர், அபினவ் மனோகர், அதர்வா டைட், வியான் முல்டர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸிலிருந்து முஜீப் உர் ரஹ்மான், பெவன் ஜேக்கப்ஸ், கரன் ஷர்மா, றீஸ் டொப்லி, சத்யநாரயண ராஜூ, விக்னேஷ் புதூர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸிலிருந்து டேவிட் மில்லர், ஷாமர் ஜோசப், ஆகாஷ் டீப், ரவி பிஷ்னோய் ஆகியோர் விடுவிக்கப்பட்டதுடன் ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸுக்கு சென்றுள்ளார்.

குஜராத் டைட்டான்ஸிலிருந்து தசுன் ஷானக, ஜெரால்ட் கொயட்ஸி ஆகியோர் விடுவிக்கப்பட்டதுடன் ஷெர்ஃபேன் ருதஃபோர்ட் மும்பை இந்தியன்ஸுக்கு சென்றுள்ளார்.

டெல்லி கப்பிடல்ஸிலிருந்து பப் டு பிளெஸி, ஜேக் பிறேஸர்-மக்குர்க், மோஹித் ஷர்மா, செதிகுல்லா அடல் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், டொனோவன் பெரைரா ராஜஸ்தான் றோயல்ஸுக்குச் சென்றுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X