Shanmugan Murugavel / 2024 மே 14 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்பை குஜராத் டைட்டான்ஸ் இழந்தது.
கொல்கத்தா நைட் றைடர்ஸுக்கெதிரான குஜராத்தின் நேற்றிரவுப் போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 13 போட்டிகளில் விளையாடி 11 புள்ளிகளுடன் குஜராத் காணப்படுகின்றது.
புள்ளிகள் பட்டியலில் நான்காமிடத்தில் காணப்படும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் 14 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், தமது எஞ்சிய போட்டியில் வென்றாலும் 13 புள்ளிகளையே அதிகபட்சமாக குஜராத்தால் பெற முடியுமென்ற நிலையிலேயே தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறும் நிலையை இழந்தது.
இதேவேளை மேற்குறித்த போட்டியைத் தொடர்ந்து 19 புள்ளிகளை கொல்கத்தா பெற்றுள்ள நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களுக்குள் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் ஹைதரபாத்துக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்ற நிலையிலேயே அவ்வணி அவ்விரண்டு போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக 18 புள்ளிகளையே பெறுமென்ற நிலையிலேயே முதலிரண்டு இடங்களுக்குள் வருவதை கொல்கத்தா உறுதிப்படுத்தியுள்ளது.
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago