Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான சி.சி.வி கபிடெல் ஆகியவை இந்தியன் பிறீமியர் லீக்கின் இரண்டு புதிய உரிமையாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஆர்.பி.சஞ்ஜெய் கொயங்கா குழுமம் 7,090 கோடி இந்திய ரூபாய்க்கு லக்னோ அணியையும் லக்சம்பேர்க்கின் சி.சி.வி கபிடெல் நிறுவனம் 5,600 கோடி இந்திய ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் பெற்றுள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான இரண்டு புதிய அணிகளைத் தெரிவு செய்வதற்கான ஏலம், டுபாயின் தாஜ் ஹோட்டலில் இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்தே இவ்விரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் விளையாடி வருவதுடன், 2022ஆம் ஆண்டின் 15ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன.
புதிய அணிகளுக்கான விலைமனுக் கோரலை கடந்த ஓகஸ்ட் மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டது.
விலைமனு விண்ணப்ப கட்டணமாக மீளத்தரப்படாத 10 இலட்சம் இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
புதிய அணிகளை வாங்குவதற்காக மொத்தம் 22 நிறுவனங்கள் விலைமனு கோரியிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஏலத்தைத் தொடர்ந்து, அதில் மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அணியொன்றின் அடிப்படை விலையாக 2,000 கோடி இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago