2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஐஸ்லாந்தை பந்தாடியது பிரான்ஸ்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 04 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற்தடவையாக யூரோ போட்டிகளுக்குள் நுழைந்து, காலிறுதி வரை சென்ற ஐஸ்லாந்தை, காலிறுதிப் போட்டியில் வைத்து பந்தாடிய போட்டியை நடாத்தும் நாடான பிரான்ஸ், இறுதி அணியாக அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

போட்டியின் 12ஆவது நிமிடத்திலேயே பிரான்ஸின் ஒலிவர் ஜிரோட் அபாரமாக பெற்ற கோலோன்றின் மூலம் பிரான்ஸ் முன்னிலை பெற்றதுடன், போட்டியின் 19ஆவது நிமிடத்தில் கிடைத்த ‘கோணர்’ ஒன்றினை, பிரான்ஸின் நட்சத்திர மத்தியகள வீரர் போல் பொக்பா தலையால் முட்டி கோலாக்க, அவ்வணி 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின்னர், போட்டியின் 42ஆவது டிமித்திரி பயேட் பெற்ற கோலின் மூலமாக 3-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் முன்னிலை பெற்றிருந்ததோடு, முதற்பாதியின் இறுதி நிமிடத்தில் அந்தோனி கிறீஸ்மன் பெற்ற கோலின் மூலமாக 4-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில், கொல்பேய்க் சிக்தோர்சன் ஐஸ்லாந்தின் முதலாவது கோலினைப் பெற்றபோதும் போட்டியின் 59ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பெற்ற ஒலிவர் ஜிரோட், பிரான்ஸின் நான்கு கோல் முன்னிலையை மீண்டும் கொண்டு வந்தார். எனினும் போட்டியின் 84ஆவது நிமிடத்தில் பிர்கித் பியார்த்தனாசொன், தலையால் முட்டி, அபாரமாகப் பெற்ற கோலின் மூலம் ஐஸ்லாந்து இரசிகர்களுக்கு ஆறுதல் கிடைக்க, இறுதியில், 5-2 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் வென்றது.

இப்போட்டியின் நாயகனாக அந்தோனி கிறீஸ்மன் தெரிவானார். இந்நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரான்ஸ், எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தற்போதைய உலக சம்பியன்களான ஜேர்மனியை சந்திக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .