2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஒரே நேரத்தில் 2 போட்டிகளில் ஆஸி?

Shanmugan Murugavel   / 2016 ஒக்டோபர் 20 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசரீதியாக, நாடுகள் பங்குபற்றும் போட்டிகளின் நெருக்கம், தொடர்ச்சியாக அதிகரித்துவரும் நிலையில், தொடர்களுக்கிடையில் போதுமான இடைவெளி, வீரர்களுக்குக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், அதில் ஒரு படி மேல் சென்று, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டிய நிலை ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தாண்டு பெப்ரவரியில், இலங்கை அணிக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் அவ்வணி பங்குபற்றும் அதேநேரத்தில், இந்தியாவுக்கெதிராக இந்தியாவில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரும் ஆரம்பிக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இந்தியத் தொடரின் திகதிகள், இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதன் உண்மையான நிலை, இன்னும் சில வாரங்களில் தெரியவருமென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .