Shanmugan Murugavel / 2016 நவம்பர் 15 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹிமாச்சலப் பிரதேச முன்னாள் துடுப்பாட்ட வீரரும் தற்போதைய நடுவருமான விரேந்தர் ஷர்மா, அவர் நடுவர் பணி வகித்த போட்டியொன்றில், இரு முனைகளிலும் நடுவர் பணி வகிக்க வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டது. இந்தியாவின் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் மைசூரில், மும்பை அணிக்கும் உத்தரப் பிரதேச அணிக்குமிடையில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே இது இடம்பெற்றுள்ளது.
அந்தப் போட்டியில், விரேந்தர் ஷர்மாவும் அவுஸ்திரேலிய நடுவரான சாம் நொகஜ்ஸ்கியும் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், நொகஜ்ஸ்கிக்கு ஏற்பட்ட உணவு நஞ்சாதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போட்டிக்கு மேலதிக நடுவராக நியமிக்கப்பட்டிருந்த வேஜித் டி என்பவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் நடுவர் குழாமின் அங்கம் அல்லாதவர் ஆவார். எனவே, அவரால் நேரடியான நடுவர் பணி புரிய முடியாமல், ஸ்குயர் லெக் திசையில் மாத்திரமே நடுவராகப் பணி புரிய அனுமதி காணப்பட்டது. ஆகவே விரேந்தர் ஷர்மா, ஒவ்வோர் ஓவர் முடிந்த பின்னரும், அடுத்த முனையின் பிரதான நடுவராக மாறி, மாறிப் பணிபுரிய வேண்டி ஏற்பட்டது.
ஆனால், போட்டியின் 3ஆம் நாளான இன்று முதல், பி.ஜெய்ப்லா என்ற நடுவர், மாற்று நடுவராக நியமிக்கப்பட்டு, விரேந்தர் ஷர்மாவின் பணி குறைக்கப்பட்டது.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago