2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஒருமாதத்துக்கு பெடரர் விலகல்

Shanmugan Murugavel   / 2016 பெப்ரவரி 04 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழங்கால் சத்திரசிகிச்சை மேற்கொண்டமையையடுத்து உலகின் மூன்றாம் நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், போட்டிகளிலிருந்து ஒரு மாதத்துக்கு விலகியுள்ளார்.

பதினேழு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களுக்குச் சொந்தக்காரரான முப்பத்து நான்கு வயதான ரொஜர் பெடரர், சுவிற்ஸர்லாந்திலேயே சத்திரசிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.

கடந்த வாரம் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரில், உலகின் முதல்நிலை வீரரான நோவக் ஜோக்கோக்விச்சுடனான அரையிறுதிப் போட்டியின் மறுநாளே ரொஜர் பெடரர் காயமடைந்திருந்தார்.

சத்திரசிகிச்சை மேற்கொண்டமை காரணமாக ரொட்டர்டாமில் இடம்பெறவுள்ள உலக டென்னிஸ் தொடரிலிருந்தும் டுபாய் சம்பியன்ஷிப்பிலிருந்தும் விலகியுள்ளார். இதில், கடந்த வருடம் மார் மாதம், தனது ஏழாவது டுபாய் சம்பியன்ஷிப்பை கைப்பற்றிய ரொஜர் பெடரர், அத்தொடரின் தற்போதைய சம்பியன் என்பதுடன் ரொட்டர்டாம் பட்டத்தை இரண்டு தடவைகள் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில், இது எதிர்பாராத பின்னடைவு என்றும் தற்போது வரை, நன்றாக உள்ளதாக உணர்வதாகவும் தனது விளையாடும் காலத்தின் பெரும்பாலான காலத்தில், தான் ஆரோக்கியமாக இருந்துள்ளதாக ரொஜர் பெடரர் தெரிவித்துள்ளார்.

சத்திரசிகிச்சை வெற்றியளித்துள்ளதாக மருத்துவர்கள் தனக்கு உறுதியளித்ததாக தெரிவித்த ரொஜர் பெடரர், முறையான பயிற்சியுடன், விரைவில் தன்னால் தொடருக்கு திரும்ப முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .