Editorial / 2017 ஜூலை 11 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரிய கிரான்ட் பிறிக்ஸ் மோட்டார்ப் பந்தயப் போட்டியில், மேர்சிடீஸ் அணியின் ஃபின்லாந்து ஓட்டுநரான வல்ட்டெரி போட்டாஸ் வெற்றிபெற்றுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற அஸர்பைஜான் கிரான்ட் பிறிக்ஸில் 2ஆவது இடத்தைப் பெற்ற அவர், தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
செபஸ்டின் வெற்றலின் சவாலை எதிர்கொண்ட அவர், அவரை முந்திக் கொண்டு வெற்றிபெற்றார்.
டானியல் றிக்கார்டோ, 3ஆவது இடத்தைப் பெற்ற அதேநேரம், லூயிஸ் ஹமில்டன், 4ஆவது இடத்தைப் பெற்றார்.
புள்ளிகளின் பட்டியலில், முதலிடத்தில் வெட்டல் தொடர்கின்ற அதேநேரத்தில், 2ஆவது இடத்தில் லூயிஸ் ஹமில்டன் காணப்படுகிறார். இருவருக்குமிடையில் 20 புள்ளிகள் வித்தியாசம் காணப்படுகிறது. 3ஆவது இடத்தில் வல்ட்டெரி போட்டாஸ் காணப்படுகிறார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago