2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஓய்வு பெறுகிறார் கொபி பிரயண்ட்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றின் மிகச் சிறந்த கூடைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படுகின்ற ஐந்து தடவை என்.பி.ஏ சம்பியனான கொபி பிரயண்ட், இந்த பருவகால முடிவில் ஓய்வு பெறவுள்ளார்.

எல்.ஏ லேக்கேர்ஸ் அணியுடனான தனது இருபது வருடகால விளையாடும் காலத்தில் 32,683 புள்ளிகளைப் பெற்றுள்ள கொபி பிரயண்ட், என்.பி.ஏ போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களில் மூன்றாவதாக விளங்குகின்றார்.

இரண்டு தடவை ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற 37 வயதான கொபி பிரயண்ட், அண்மைய பருவகாலங்களில் காயங்களினால் அவதிப்பட்டு, இந்த வருடத்தில் லேக்கேர்ஸ் அணிக்கான போட்டிகளில் தனது முழுத் திறமைகளையும் வெளிப்படுத்த தவறியிருந்தார்.

இந்நிலையிலேயே, விடைபெறுவதற்கான நேரமிது என தனது உடலுக்கு தெரியும் என கொபி பிரயண்ட் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .