Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான பிரட் ஹடின், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அத்தோடு, குடும்பத்தை முன்னிறுத்தியமை தொடர்பில் தனக்குக் கவலையேதும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் இடம்பெற்ற ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்துக்குச் சென்றிருந்த பிரட் ஹடின், முதலாவது போட்டியில் பங்குபற்றியதோடு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகளுக்குச் சிகிச்சை தேவைப்பட்டதன் காரணமாக, 2ஆவது போட்டியிலிருந்து விலகியிருந்தார். 3ஆவது போட்டியில் பங்குபற்றத் தயாராக இருந்த போதிலும், 2ஆவது போட்டியில் பங்குபற்றிய பீற்றர் நெவிலே அடுத்த 3 போட்டிகளிலும் பங்குபற்றியிருந்தார்.
இந்நிலையில், இன்று தனது ஓய்வை அறிவித்த ஹடின், இரண்டாவது போட்டியிலிருந்து விலகியமை குறித்து, வருத்தமேதும் கிடையாது எனக் குறிப்பிட்டார்.'அவுஸ்திரேலியாவிலுள்ள எந்தவொரு பெற்றோரை விடவும் நான் வேறானவன் கிடையாது. அனைவருமே தங்களது குடும்பத்தை முன்னிறுத்துவர். அது குறித்து எந்தவிதமான வருத்தங்களும் எனக்குக் கிடையாது" எனத் தெரிவித்தார். 'என்னைப் பொறுத்தவரை, அது தெரிவாகக் காணப்படவில்லை. வைத்தியசாலையில் வைத்து மனைவியிடம், இனிமேல் நான் விளையாட மாட்டேன் எனத் தெரிவித்தமை ஞாபகமிருக்கிறது" எனவும் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா சார்பாக 66 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய ஹடின், 4 சதங்கள், 18 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக, 32.98 என்ற சராசரியில் 3266 ஓட்டங்களைப் பெற்றதோடு, 262 பிடிகளையும் 8 ஸ்டம்பிங்குகளையும் மேற்கொண்டிருந்தார். இவ்வாண்டு இடம்பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற பின்னர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
அவுஸ்திரேலியா சார்பாக இம்முறை ஆஷஸ் தொடருக்காக அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்து, மைக்கல் கிளார்க், பிரட் ஹடின், றயன் ஹரிஸ், கிறிஸ் றொஜர்ஸ், ஷேன் வொற்சன் ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago