Shanmugan Murugavel / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றிருந்த நியூசிலாந்து அணி றக்பியின் உலக சம்பியன்களாக, தங்களை மீண்டும் நிரூபித்துக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியை வெற்றிகொண்டு சம்பியனாகியே, நடப்புச் சம்பியன்களான நியூசிலாந்து அணி, தங்களைச் சம்பியன்களாக நிலைநிறுத்திக் கொண்டது.
இலண்டனின் டுவிக்கென்ஹாம் விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியைக் காண, 80,125 இரசிகர்கள் அவ்வரங்குக்கு வந்திருந்தனர்.
இப்போட்டியை வெற்றிகொள்வதற்கான அதிக வாய்ப்புகளுள்ள அணியாக நியூசிலாந்து காணப்பட்ட போதிலும், முதல் 30 நிமிடங்களில், 6-3 என்ற புள்ளிகள் கணக்கிலேயே நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றிருந்தது. எனினும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முதற்பாதி முடிவில் 16-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணி, 52ஆவது நிமிட முடிவில் 21-3 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலையில் காணப்பட்டது.
எனினும், 53ஆவது நிமிடத்தில் டேவிட் பொகொக்கினால் பெறப்பட்ட பெறப்பட்ட 'ட்ரை" புள்ளிகள் மூலம், 21-8 என்ற நிலைமை காணப்பட்டதோடு, மிகக் கடுமையான போராட்டத்தை அவுஸ்திரேலியா வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, 66ஆவது நிமிடத்தில், புள்ளிகளின் நிலை 21-17 என்ற நிலைக்கு மாறியது.
தங்களின் சம்பியன் நிலையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி, அதன் பின்னர் போட்டியை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுக் கொண்டது.
இப்போட்டியின் நாயகனாக, டான் கார்ட்டர் தெரிவானார். 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில், உபாதை காரணமாகப் பங்குபெற்றிருக்காத டான் கார்ட்டர், தனது 12 வருடகால றக்பி வாழ்வை, உயரிய விருதொன்றுடன் முடித்துக் கொண்டார்.
இந்த வெற்றியுடன், றக்பி உலகக் கிண்ணத்தை அதிக தடவைகள் கைப்பற்றிய நாடாக நியூசிலாந்து மாறியுள்ளது. அவ்வணி, 3 தடவைகள் இக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. இரண்டாவது இடத்தில் தென்னாபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் தலா 2 சம்பியன் பட்டங்களுடன் காணப்படுகின்றன.
முன்னதாக, நேற்று அதிகாலை (இலங்கை நேரப்படி) இடம்பெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஆர்ஜென்டினா அணியை எதிர்கொண்ட தென்னாபிரிக்கா, 24-13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago