2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

கால்பந்தாட்ட உலகின் மிகச்சிறந்த முகாமையாளர் ஃபேர்குஸன் ; றூணி

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்பந்தாட்ட உலகில் தோன்றிய முகாமையாளர்களில், சேர் அலெக்ஸ் ஃபேர்குஸனே மிகச்சிறந்தவர் என, மன்செஸ்டர் யுனைட்டட் அணியின் தலைவர் வெய்ன் றூணி தெரிவித்துள்ளார்.

27 வருடங்களாக மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய சேர் அலெக்ஸ், 2004ஆம் ஆண்டு றூணியை யுனைட்டட் கழகத்துக்காக ஒப்பந்தம் செய்த போதிலும், அவருக்கும் றூணிக்குமிடையே கருத்து முரண்பாடுகள் காணப்பட்டிருந்தன. குறிப்பாக, அவரது பதவிக்காலத்தின் இறுதியில், றூணியை அணியில் சேர்ப்பதற்கும் அவர் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு, சேர் அலெக்ஸ் வெளியிட்ட சுயசரிதைப் புத்தகத்தில், றூணியின் உடற்றகுதி தொடர்பாகவும் புதிய விடயங்களை உடனடியாகக் கற்றுக் கொள்ளாமை தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள றூணி, தங்கள் இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டதாகவும், ஆனால் அது சாதாரணமானது எனவும் தெரிவித்ததோடு, முழுக் காலத்தினதும் சிறந்த முகாமையாளர் அவரே எனத் தன்னால் கூற முடியும் எனவும் தெரிவித்தார்.

இப்போதும் கூட, சேர் அலெக்ஸை அடிக்கடி பார்ப்பதாகக் குறிப்பிடும் றூணி, இருவருக்குமிடையில் வேறுபாடுகள் மாத்திரமே காணப்பட்டதாகவும், இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது என்றில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .