2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

கொஸ்டாவின் கோலினால் வென்று முதலிடத்துக்குச் சென்றது செல்சி

Shanmugan Murugavel   / 2016 நவம்பர் 21 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற போட்டியில், மிடில்ஸ்பேர்க் அணியைத் தோற்கடித்த செல்சி, தாம் பிறீமியர் லீக் சம்பியன்களான 2015ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் முதற்தடவையாக, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்கு வந்தது.

சாதாரணமாக போட்டியை ஆரம்பித்த செல்சி, நேரம் செல்லச் செல்ல தமது ஆட்டத்தை வேகப்படுத்தியதுடன், போட்டியின் 41ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்ற கோலின் மூலம் இடைவேளையின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் தொடர்ந்து கோல் பெறும் வாய்ப்புகளை உருவாக்கிய செல்சி, 1-0 என்ற கோல் கணக்கில் இறுதியில் வெற்றி பெற்றது.

இப்பருவகால பிறீமியர் லீக்கின் ஆரம்ப இரண்டு மாதங்களில் செல்சி தடுமாறியதோடு, இவ்வாண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற ஆர்சனலுடனான போட்டியில், 3-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

அதனைத் தொடர்ந்து, 3-4-3 என்ற அணி முறைக்கு செல்சியை அதன் முகாமையாளர் அந்தோனியோ கொந்தே மாற்றினார். அன்று முதல் ஏறுமுகத்தில் பயணிக்கும் செல்சி, அடுத்த ஆறு போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்றதோடு, அந்த ஆறு போட்டிகளிலும் எதிரணியால் செல்சிக்கெதிராக எந்தவொரு கோலையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .