Shanmugan Murugavel / 2016 ஜனவரி 10 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது போட்டியில், நியூசிலாந்து அணிக்கு இலகுவான வெற்றி கிடைத்ததோடு, சாதனைகளின் போட்டியாகவும் அமைந்திருந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கிய மார்ட்டின் கப்டில், தனது அரைச்சதத்தை 19 பந்துகளில் பூர்த்தி செய்திருந்தார். இது, நியூசிலாந்து சார்பாக இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் வேகமாகப் பெறப்பட்ட அரைச்சதமாகும். 23 பந்துகளில் அரைச்சததத்தைப் பூர்த்தி செய்த ஆரான் றெட்மொன்டினதும் தன்னுடையதும் சாதனையை, மார்ட்டின் கப்டில் முறியடித்திருந்தார்.
எனினும் அவரது சாதனை, 20 நிமிடங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. மூன்றாமிலக்க வீரராகக் களமிறங்கிய கொலின் முன்றோ, 14 பந்துகளில் தனது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார். இது, நியூசிலாந்துச் சாதனை என்பதோடு, சர்வதேச ரீதியில் பெறப்பட்ட இரண்டாவது வேகமான அரைச்சதமாகும். ஒரே ஓவரில் 6 ஆறு ஓட்டங்களை விளாசிய யுவ்ராஜ் சிங், 12 பந்துகளில் அரைச்சதத்தைப் பூர்த்திசெய்ததே, தற்போதைய சாதனையாக உள்ளது.
தவிர, 10 ஓவர்களில் இந்த இலக்கை நியூசிலாந்து அடைந்ததும், சாதனையாகும். 120 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை, அணியொன்று விரைவாகத் துரத்தியடித்து வென்ற சாதனையாக, இது காணப்படுகிறது.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago