Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 22 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்சி அணிக்கும் டைனமோ கைவ் அணிக்குமிடையில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியில், டைனமோ கைவ் அணியின் கறுப்பின இரசிகர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சமநிலையில் முடிவடைந்த இப்போட்டியின் போது, டைனமோ அணியின் இரசிகர்கள், அவ்வணியின் கறுப்பின இரசிகர்களைத் தாக்கும் காணொளி, வெளியாகியிருந்தது.
தாக்குதலுக்குள்ளான இரசிகர்கள் தப்பியோட முயன்றபோது, ஏனைய இரசிகர்களால் அவர்கள் மீண்டும் தாக்கப்படுவதும், அதில் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் சட்ட அமைப்புக்களிடம் ஏற்கெனவே, அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தால் காணொளி வழங்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தினால் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் இடம்பெற்ற மற்றொரு இனவாதச் சம்பவத்தினால், டைனமோ கழகத்துக்கு 15,000 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்பட்டதோடு, அரங்கின் ஒரு பகுதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago