2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கலட்டசரேயில் இணைந்த ஒஸிம்ஹென்

Shanmugan Murugavel   / 2024 செப்டெம்பர் 05 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான நாப்போலியிடமிருந்து பருவகாலமொன்றுக்கான கடனடிப்படையில் துருக்கியக் கழகமான கலடசரேயில் முன்களவீரரான விக்டர் ஒஸிம்ஹென் இணைந்துள்ளதாக புதன்கிழமை (04) அக்கழகம் அறிவித்துள்ளது.

2024-2025 பருவகாலத்துக்காக 6 மில்லியன் யூரோக்களை 25 வயதான ஒஸிம்ஹென்னுக்கு கலடசரே செலுத்தவுள்ளதாக அக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

நாப்போலியுடன் 2026ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்த நீடிப்பொன்றை 2023ஆம் ஆண்டு டிசெம்பரில் ஒஸிம்ஹென் கைச்சாத்திட்டதுடன், அதை ஓராண்டால் நீடிக்கும் தெரிவையும் அக்கழகம் கொண்டுள்ளது.

நாப்போலியில் 2020ஆம் ஆண்டு இணைந்த ஒஸிம்ஹென் 133 போட்டிகளில் விளையாடி 76 கோல்களைப் பெற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .